tngovt

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் 2017,2018 ஆம் ஆண்டுகளில்,குறிப்பிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகத்தெரிவித்து,தற்கொலைக்கான வாய்ப்பைக் குறைக்கும் வகையில், குறிப்பிட்ட அந்த6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபெட், புரோபெனோபாஸ்+சைபரமேத்ரின், குளோரோபைரிபாஸ்+சைபர்மெத்ரின் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது . மேலும்,மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நிரந்தரத்தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment