Advertisment

ஆட்டோ மீது மோதிய அரசுப் பேருந்து; 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு 

6 people were passed away a collision with a government bus in Mamallapuram

மாமல்லபுரம் அருகே கிழக்குகடற்கரைச்சாலையில்ஆட்டோமீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

சென்னையிலிருந்துஅரசுப் பேருந்து ஒன்று புதுச்சேரியை நோக்கி மாமல்லபுரம் கிழக்குகடற்கரைச்சாலையில்சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்துகல்பாக்கத்தில்இருந்துஎதிரே வந்தஆட்டோமீது மோதியுள்ளது. அதில்ஆட்டோநொறுங்கியதில் அதில் பயணித்த 3 பெண்கள், 2 சிறுவர்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்கள் காயமின்றிஉயிர் தப்பினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்துவழக்குப் பதிவு செய்த போலீசார்விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

accident mamallapuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe