nn

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள, அய்யா கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அய்யகவுண்டம்பாளையம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவில் அருகில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மாதப்பன் (60), ரவி (57), மாதேஷ் (55), வெங்கடேஷ் (44), ரமேஷ் (36), சிங்காரவேலன் (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள் மற்றும் பணம் ரூ. 21, 920 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.