style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும்,நேற்று மதுரை பாலமேட்டிலும்நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்துஇன்று தற்போது நடைபெற்று வரும் உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1400 காளைகள் மற்றும் 848 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம்சுழற்சி முறையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் கார்,கட்டில் உட்பட பலபரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியான நிலையில், 6 வீரர்கள்மாடு முட்டி படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது.