Advertisment

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு... முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

 6 people drowned in Kollidam river... Chief Minister announced relief

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டியை சேர்ந்த 52 பேர் பேருந்து மூலம் பூண்டிமாதா கோவிலுக்கு சுற்றலாவந்துள்ளனர். அப்போதுதிருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதில் நீரில் மூழ்கி 6 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு படையினருக்குதகவல் தெரிவிக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது. பல மணி நேரதேடுதலுக்கு பின் 6 பேரின்உடலும் ஒன்றன்பின் ஒன்றாக மீட்கப்பட்டது. அதன்பின் நீரில் மூழ்கி உயிரிழந்த ஆறு பேரின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கும் நிவாரண நிதியாக தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

incident Kollidam Thoothukudi TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe