Advertisment

நாமக்கல்லில் ஆற்றில் முழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு!!

இன்று காலை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் சரவணன் போட்டோகிராபரான இவருடைய குடும்பமே காவேரி ஆற்றில் மூழ்கி இறந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது சம்பந்தமாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்

Advertisment

E.R .ஈஸ்வரன் கூறும்போது

"காவிரி ஆற்றில் ஆழம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஆபாய எச்சரிக்கை பலகைகளை உடனடியாக வைக்க வேண்டும்." என்ற அவர் மேலும் பேசுகையில்,

Advertisment

death

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பொத்தனூர் காவிரி ஆற்று பகுதியில் குளிக்க சென்ற 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. காவிரி ஆற்றில் ஆழம் நிறைந்த பகுதியில் குளித்த சிறுவர்கள் சுழலில் சிக்கியதால் அவர்களை காப்பாற்ற சென்ற பெற்றோர்களும் ஒருவர்பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார்கள். கரூரில் உள்ள டிஎன்பிஎல் எனப்படும் பேப்பர் நிறுவனத்திற்கு தண்ணீர் எடுப்பதற்காக பொத்தனூர் காவிரி ஆற்றில் பல அடி ஆழம் கொண்ட பள்ளங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆற்றில் புதிதாக குளிக்க செல்லும் சிறுவர்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் ஆற்றில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் இருக்கும் பகுதி தெரியாமல் போய்விடுகிறது. இதனால் ஆபத்தை உணராமல் ஆழம் நிறைந்த பகுதியில் குளிக்க செல்லும் போது எதிர்பாராதவிதமாக துயர சம்பவங்கள் ஏற்பட்டுவிடுகிறது.

eswaran

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எனவே காவிரி ஆற்றில் ஆழம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆபாய எச்சரிக்கை பலகைகளை உடனடியாக வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தெரிவித்துக்கொள்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு போதிய நிவாரண உதவி வழங்க வேண்டும்" என்றார்.

பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை காலம் என்பதால் சிறுவர்கள், இளைஞர்கள் கால்வாய், மற்றும் ஆறுகளில் அதிக அளவில் குளிக்க செல்கிறார்கள் இதை அரசு கவனத்தில் எடுத்து அபாயகரமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும் இளைஞர்கள் பெற்றோர்கள் உயிர் பாதுகாப்பு, கவனத்துடன் நீரில் குளிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்என்றார்.

E.R.Eswaran death rivers namakkal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe