Advertisment

பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த கொடூரம்; 6 பேர் கைது

6 people arrested for Urinating on  youths

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேர் குளிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, அவர்களை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களிடமிருந்து செல்போன்களைப் பிடுங்கி பயங்கரமான ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர்.

Advertisment

பின்னர் இரு இளைஞர்களையும் சாதி கேட்டு, அவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தவுடன் மீண்டும் அவர்களைசரமாரி தாக்குதல் நடத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்துக் கொடூரமாக நடந்துகொண்டுள்ளனர். மேலும், மாலை முதல் இரவு வரை இருவரையும் வைத்து அந்த கும்பல் சித்திரவதை செய்துள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இருவரையும் அந்த கும்பலிடம் இருந்து மீட்ட பொதுமக்கள், பாதிக்கப்பட்ட இளைஞர்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில், பொன்னுமணி என்பவர்தான் தனது நண்பர்களுடன் சேர்ந்துஇந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனடிப்படையில் ராமர்(22), சிவா(22), நல்லமுத்து(21), லட்சுமணன் (20), ஆயிரம்(19) ஆகியோர் மீது வன்கொடுமை, வழிப்பறி கொள்ளைஉள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

arrested police thirunelveli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe