குலதெய்வ வழிபாடு முடிந்து காரில் ஊர் திரும்பிய குடும்பத்தினர் மீது லாரி மோதி 6 பேர் பலி..! 

6 passes away in lorry collision with car  near vellore

வேலூர் மாநகரம் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகிலுள்ள புதூர் மாரியம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் ஒரு காரில் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை புறப்பட்டு சென்றுள்ளனர். கோயிலில் பொங்கல் வைத்துவிட்டு செங்கம் – போளுர் – கண்ணமங்களம் வழியாக வேலூர் சென்றுக்கொண்டு இருந்தனர்.

சரியாக மதியம் 3 மணியவில் அந்தக்கார் சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கள் கிராமத்தின் அருகே செல்லும் பொழுது திடீரென கார் டயர் வெடித்து எதிரே கரும்பு ஏற்றிவந்த லாரி மீது மோதியது. கார் மீது லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டு மரண ஓலம் எழுந்துள்ளது. அருகில் வயல் வெளியில் வேலை செய்துக்கொண்டுயிருந்தவர்கள் ஓடிவந்து காரில் இருந்தவர்களை மீட்டுள்ளனர்.

இதுப்பற்றி தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவயிடத்துக்கு வந்த சந்தவாசல் காவல்நிலைய போலீஸார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த காரில் பயணம் செய்த கோமதி 26, முனியம்மாள் 60, பரிமளா 21, ராதிகா 45 ஆகிய நான்கு பெண்களும். மூர்த்தி 68 என்பவரும், 3 மாத பெண் குழந்தையான நிஷாவும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மேலும், வேலுார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மாலதி 27, பூர்ணிமா 35, கலா 36, கார் டிரைவர் சசிக்குமார் 25, 3 மாத ஆண் குழந்தை குமரன் உள்பட ஐந்து பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

thiruvannamalai Vellore
இதையும் படியுங்கள்
Subscribe