திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு சாலையில் இருக்கும் சுங்கச்சாவடியில் நிலக்கோட்டை டிஎஸ்பி பாலகுமாரன் தலைமையில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது கம்பத்திலிருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசுப் பேருந்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பேருந்தில் பயணம் செய்த கம்பம் பகுதியைச் சேர்ந்த அமரேசன் என்பவரிடம் பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டறிந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இது குறித்த விசாரணையில் அமரேசன் கொண்டு வந்த 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு எந்த ஆவணமும் இல்லை இதனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின்பு ஆறு லட்சத்து 47 ரூபாய் பணம் நிலக்கோட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.