தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி வீட்டுவசதி துறை முதன்மைச் செயலாளராகராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை இயக்குனர் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குனராக அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zzz123qwqww.jpg)
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். நகரமைப்பு திட்டமிடல் இயக்குனராக சந்திரசேகர் சாகமுரிநியமிக்கப்பட்டுள்ளார். சிஎம்டிஏ உறுப்பினர் மற்றும் செயலாளராக கார்த்திகேயன்நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல்தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணை தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலராக சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Follow Us