6 goats, 15 chickens lost in accident

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கேஷ். இவர் அதே ஊரில் உள்ள தனது தோட்டத்தில் ஆடு, மாடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார். இரவில் ஆடுகளை ஒரு கீற்றுக் கொட்டகையில் பாதுகாப்பாக கட்டி வைத்திருப்பது வழக்கம்.மேலும், அதன் அருகே மற்றொரு கொட்டகையில் தங்கேஷின் சகோதரி அவரது மகனுடன் வசிப்பதுடன் ஆடு மாடுகளுக்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கூலி வேலைக்கு வெளியூர் செல்ல வேண்டிய தங்கேஷின் சகோதரி உணவு சமைத்துக் கொண்டு வேளைக்கு சென்றுவிட்டார். தங்கேஷின் சகோதரி மகன் கோயிலுக்கு மாலை அணிந்திருப்பதால் வெளியில் ஒரு கோயிலில் தங்கியுள்ளார். இந்த சூழலில் இன்று காலை அந்த கொட்டகைகளில் இருந்து புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்த போது கீற்றுக் கொட்டகைகள் முழுமையாக எரிந்த சாம்பலாக கிடந்துள்ளது. ஒரு பசு மாட்டின் மீது தீ பற்றி எரிவதைப் பார்த்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர். அதற்குள் பசுமாட்டிற்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது.

6 goats, 15 chickens lost in accident

Advertisment

மேலும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த பிறகு அருகில் சென்று பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். 6 ஆடுகள், 15 கோழிகள் ஆங்காங்கே எரிந்து கரிக்கட்டையாக கிடந்தது. அதே போல பல ஆவணங்களும் எரிந்து சாம்பலாகிக் கிடந்தது. இதனைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். ஒரு குடும்பத்தின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் இப்படி எரிந்து சாம்பலாகிப் போனதே என்று கண்ணீரோடு கதறுகின்றனர்.

தகவல் அறிந்து வந்த கீரமங்கலம் போலிசார், குளமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து தீ எப்படி பற்றியது? என்று விசாரணை செய்து வருகின்றனர். கால்நடைத் துறையினர் தீயில் பலியான ஆடுகள், கோழிகளை உடற்கூராய்வு செய்தனர். ஏழைகளின் வாழ்வாதாரம் கால்நடைகள் வளர்ப்பது. இப்படி ஒட்டு மொத்தமாக தீக்கிறையானதால் அந்த குடும்பமே நொடித்துப் போய் உள்ளது. அந்த குடும்பம் மீண்டுவர அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள்.