Advertisment

அன்னை சத்யா இல்லத்தில் இருந்து தப்பிய 6 சிறுமிகள்; போலீசார் விசாரணை

 6 girls who escaped from Mother Satya's house; Police investigation

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்த ஆறு சிறுமிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் அருகே அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற சிறுமிகள் மற்றும் காதல் விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் எனசுமார் இருபதுக்கும் மேற்பட்ட சிறுமிகள் இந்த இல்லத்தில் தங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு உணவு அருந்திவிட்டு உறங்கச் சென்ற சிறுமிகளில் ஆறு சிறுமிகள் பாதுகாவலரின் அறையைத் தாழிட்டுவிட்டு அதிகாலையில் தப்பியதாகத்தெரிய வந்தது. இது தொடர்பாக சிவ காஞ்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய ஆறு சிறுமிகளைத்தேடி வருகின்றனர். தப்பியோடிய சிறுமிகள் காஞ்சிபுரம், விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Advertisment

children Investigation kanjipuram police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe