Advertisment

சென்னையில் 6 விமானங்கள் ரத்து

6 flights canceled in Chennai

தீபாவளி பண்டிகை காரணமாக இன்று சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. அதனால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற நகரங்களுக்கு செல்ல போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் மூன்றும், சென்னைக்கு வருகை தர வேண்டிய விமானங்கள் மூன்றும் என மொத்தம் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisment

அதன்படி இன்று (12.11.2023) காலை 09.50 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. இரவு 07.00 மணிக்கு சென்னையில் இருந்து புனே செல்ல இருந்த ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. நாளை (13.11.2023) அதிகாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கை செல்ல இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அதே போன்று டெல்லியில் இருந்து காலை 08.50 மணிக்கு சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. புனேயில் இருந்து இன்று இரவு வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 02.00 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு வேறு விமானங்களில் பயணம்செய்ய டிக்கெட் மாற்றி தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

diwali Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe