Skip to main content

"மாணவர்களின் கற்றல் திறனை அறியவே பொதுத்தேர்வு"!- அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

கல்வி வளர்ச்சி மற்றும் கற்றல் திறனை அறியவே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

5th and 8th std exam ministers sengottaiyan speech

இதனிடையே 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் அச்சப்பட தேவையில்லை என்றும், மாநிலம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார். மேலும் ஆசிரியர்களைத் தயார்படுத்துவதற்காகவும் தேர்வு நடத்தப்படுகிறது என்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான இறுதித்தேர்வு; தேதியில் மாற்றம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை?

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

Final Examination for Students; Department of School Education to change the date

 

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் புதிதாக பரவும் வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு இருக்கிறதா எனக் கண்டறிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டன. முகாம்களில் தங்களை பரிசோதனை செய்து கொண்டவர்களில் 2600க்கும் மேற்பட்டவர்களுக்கு ஹெச்3என்2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொற்றுக்குள்ளானவர்கள் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

 

அதேபோல் புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களாக 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்திருந்தார். அதன்படி ஜனவரி மாதத்தில் மட்டும் 35 பேரும், பிப்ரவரி மாதத்தில் 38 பேரும், மார்ச் மாதத்தில் 12 ஆம் தேதி வரை 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த பாதிப்புகளில் 18 பேர் 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் என்பதும், மற்றொரு 18 பேர் 6 முதல் 15 வயது வரையிலான பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

புதுச்சேரியில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் அதிக அளவில் புதிய வைரஸ் தொற்று பரவி வருகிறதாகவும், இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் 26 ஆம் தேதிவரை 1 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் கூறினார். இந்த உத்தரவு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

 

இந்நிலையில், தமிழ்நாட்டில் மாநிலக் கல்வித்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி பொதுத்தேர்வு துவங்க இருக்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் தொற்று பரவி வருவதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. 

 

ஏப்ரல் மாதத்தின் இறுதியில் நடைபெற இருந்த 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த தேர்வுகளை ஏப்ரல் 14 ஆம் தேதி முதலே நடத்தலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு இன்னும் சில மணிநேரத்தில் வெளியிடப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

Next Story

9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

9, 10 th std students another exams tn govt decide

 

தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவ்வப்போது மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

 

குறிப்பாக, தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு ஊரடங்கை அமல்படுத்த நேரிடும் என்று தமிழக அரசு மக்களை எச்சரித்துள்ளது.

 

இந்த கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் தலைமையில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திட்டமிட்டபடி, +2 பொதுத்தேர்வு மே 3- ஆம் தேதி முதல் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல் +2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வழிகாட்டுதல் வெளியான நிலையில், அதனை நடத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.

 

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் 9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. தேர்வு இல்லாவிட்டாலும் மாணவர்களின் திறனை அறிந்துகொள்ள திறனறிவுத் தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

 

இருப்பினும் திறனறிவுத் தேர்வில் சரியாக விடை அளிக்காவிட்டால் தேர்ச்சி கிடையாது என்பது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாது எனத் தமிழக அரசு என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இத்தகைய தகவல் வெளியாகியுள்ளது.