Skip to main content

தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்-தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

Published on 31/01/2019 | Edited on 31/01/2019

 

voter

 

சென்னை தலைமை செயலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு 

 

தமிழகத்தில் மொத்தம்  5 கொடியே 91 லட்சத்து23 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,92,56,960. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2, 98, 60,765, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 5,472 என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்!

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

6.11 crore voters in Tamil Nadu

 

தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தோராயமாக 6 கோடியே 11 லட்சம் வாக்களர்கள் தமிழகத்தில் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் தோராயமாக 3 கோடி பேர் உள்ளனர். பெண் வாக்களர்கள் 3 கோடியே 10 லட்சம் பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 16 பேர் உள்ளனர்.

 

புதிய வாக்காளர்கள் தங்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். விடுபட்ட வாக்களர்களின் பெயர்களை படிவம் 6 மூலம் சேர்க்க வேண்டும். முகவரி மாற்றம் செய்ய வேண்டும் எனில் படிவம் 8 மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 அன்று வெளியிடப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

 

04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய 4 நாட்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதையடுத்து 05.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6 லட்சத்து 52 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.  குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்” என தெரிவித்தார். 

 

 

 

Next Story

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Draft voter list release today

 

தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று வெளியிடுகிறார்.

 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நேற்று முன்தினம் (25.10.2023) நடத்தினார். இந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது படிவங்களின் தீர்வு மேற்கொள்ளுதல் மற்றும் அதன் அட்டவணை குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27 ஆம் தேதி (27.10.2023) வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ இன்று காலை வெளியிடுகிறார். இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 அன்று வெளியிடப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.