Advertisment

'புதிய வழித்தடங்களில் 59 பேருந்துகள்'-தொடங்கி வைத்த ஐ.பெரியசாமி

 '59 buses on new routes'-I. Periyasamy started

Advertisment

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் 59 புதிய பேருந்துகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கொடிய அசைத்து சேர்த்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் திண்டுக்கல் சச்சிதானந்தம், தேனி தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி ஐ.பி.செந்தில் குமார், வேடசந்தூர் காந்திராஜன், பெரியகுளம் சரவணக்குமார், ஆண்டிப்பட்டி .மகாராஜன், மேயர் இளமதி ஜோதி பிரகாஷ். துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ''தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றியது மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்று அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார். தமிழக மக்களின் உரிமைக்காக மட்டுமின்றி இந்தியாவிற்கே குரல் கொடுத்து சிறந்த முதல்வராக திகழ்கிறார் கலைஞர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் போக்குவரத்துதுறை அரசுடமை ஆக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் போக்குவரத்துத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, அதிக நிதி ஒதுக்கீடு செய்து, குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் அதற்காக 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Advertisment

 '59 buses on new routes'-I. Periyasamy started

திண்டுக்கல் மாவட்டத்தில் 59 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 5 நகர்ப்புற பேருந்துகள், 53 புதிய புறநகர் பேருந்துகள், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய வழித்தடத்தில் ஒரு பேருந்து என 59 புதிய பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் திண்டுக்கல் மண்டலத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 33 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் சுமார் 400 கோடி பயணங்கள் இருக்கும்.

பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை இயக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தியாவிலேயே ஜிஎஸ்டி செலுத்துவதில் 4 வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் அதற்குரிய நிதி ஆதாரங்கள் தமிழகத்திற்கு வந்து சேருவது இல்லை. இருந்தபோதிலும் இருக்கும் நிதியை வைத்து மக்களுக்குத் தேவையான திட்டங்களை ம தமிழ்நாடு முதலமைச்சர் திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, சிந்தித்து மக்களுக்காக 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

nn

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் திட்டங்களுக்காக சுமார் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக ரூ.5 50 கோடி மதிப்பீட்டிலான திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம், பழனி பகுதிக்கு குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ.1000 கோடி, வேடசந்தூர் பகுதி க்கு ரூ.300 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வகுப்பறைகள் அனைத்தும் காற்றோட்டமான வசதியுடன், வண்ண கருத்துப்படங்கள் வரைந்து மாணவ, மாணவிகள் கல்வி கற்க ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமத்துவம், சகோதரத்துவத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்பதற்காகவும், அரசின் திட்டங்களை அனைவரையும் சென்றடைய தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையோடு இருந்து செயல்பட வேண்டும்''என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe