Advertisment

டாஸ்மாக் ஊழியரிடம் 5.70 லட்சம் வழிப்பறி கொள்ளை! 

5.70 lakh stolen from Tasmac employee!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் உள்ள டாஸ்மார்க் கடையில் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார்(47), டாஸ்மாக் விற்பனையாளராகவும் இவருடன் களரம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகன்(37) என்பவர் உதவியாளராகவும் பணிபுரித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் டாஸ்மார்க் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்ப தயாராக இருந்தனர்.

Advertisment

அப்போது திடீரென முகத்தை துணியால் மூடி கட்டிக்கொண்ட வந்த நான்கு பேர் பணியாளர்களிடம் கத்தியை எடுத்துக்காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி ஊழியர்களிடம் இருந்த 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் டாஸ்மாக் விற்பனை பணத்தை பறித்து சென்றுள்ளனர். அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் இருவரும் உடனடியாக பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பணியாளர்கள் புகாரின் பேரில் போலீசார் இருசக்கர வாகனத்தில் வழிப்பறி கொள்ளையடித்துச் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Advertisment

Perambalur police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe