Advertisment

கடந்த 6 வருடத்தில் 561 யானைகள் உயிரிழப்பு... தமிழக வனத்துறையின் அதிர்ச்சி பதில்!

561 elephants passed away in last 6 years ... Tamil Nadu Forest Department's shocking response!

தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சென்னையைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ஆன்டனி ரூபின் என்பவர் தமிழகத்தில் யானைகள் உயிரிழப்பு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வியெழுப்பியிருந்தார்.அதற்கு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 561 யானைகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக ஈரோடு மண்டலத்தில் 167 யானைகளும், கோவை மண்டலத்தில் 134 யானைகளும், தர்மபுரியில் 89 யானைகளும் உயிரிழந்துள்ளன.அதேபோல் 2015-ஆம் ஆண்டு 61 யானைகளும், 2016-ல் 98 யானைகளும், 2017-ல் 125 யானைகளும், 2018-ல் 84 யானைகளும், 2019-ல்108 யானைகளும், 2020 செப். மாதம் வரை 85 யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுட்டள்ளது. 6 ஆண்டுகளில் உயிரிழந்த 561 யானைகளில், 161 யானை குட்டிகளும் அடக்கம்.அதேபோல் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 7 யானைகள் உயிரிழந்துள்ளன.

உணவு பற்றாக்குறை, யானை வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத மின்வேலிகள், ரயில் விபத்து, வேட்டை போன்ற காரணங்களால் யானை உயிரிழப்பு என்பது அதிகரித்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Tamilnadu Erode Forest Department elephant
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe