Advertisment

550 கிலோ கலப்படத் தேயிலைத் தூள் பறிமுதல்!

550 kg adulterated tea powder seized in Trichy

திருச்சி அரியமங்கலம் பகுதியில்பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து நேற்று திருச்சி அரியமங்கலம் திருமகள் தெரு பகுதியில் உள்ள செல்வின் என்பவர் குடோனில் சுமார் 550 கிலோ கலப்படத்தேயிலைத்தூள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்தனர்.

Advertisment

இதனை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபுதலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்செல்வராஜ், வசந்தன், பொன்ராஜ், இப்ராஹிம் மற்றும் ஜஸ்டின் ஆகியோர் கொண்ட குழுவால் அங்கிருந்த 550 கிலோ கலப்படத்தேயிலைத்தூள் மற்றும் கலப்படத்துக்கு பயன்படுத்திய பாக்கெட்டுகள்,இரு சக்கர ஹோண்டா வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு போடுவதற்காக மூன்று சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

மேலும், தேயிலைத்தூள்களை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் கலப்படத்தேயிலைத்தூளை விற்பனை செய்யக்கூடாது என்றும், பொதுமக்களும் தாங்கள் வாங்கும் தேயிலைத்தூளில் கலப்படம் இருப்பதாகச் சந்தேகித்தால் மாவட்ட நியமன அலுவலர் - 99 44 95 95 95,95 85 95 95 95 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

trichy Seized
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe