
தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு 4,862-ல் இருந்து 6,983 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 6,939 பேர், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 44 பேர் என 6,983 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,28,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கரோனா பாதிப்பு 6,983 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 3,759 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக நேற்று இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என போலீசார் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீறிய 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்டோக்கள், 14 இலகுரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஜனவரி 15, 18, 26 ஆகிய தேதிகளில் மூடப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)