தந்தை பெரியாரின் திராவிட இயக்க கொள்கையால் ஈர்க்கப்பட்டு பேரறிஞர் அண்ணா அவர்களால் கருப்பு தங்கம் என்று அழைக்கப்பட்டவரும், கலைஞரின் உற்ற நண்பராக திகழ்ந்தவருமான வழக்கறிஞர் இ.ரெ. இளம்வழுதியின் 52 வது நினைவேந்தல் நிகழ்வு கடலூர் திமுக சார்பில் நடைபெற்றது.
மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜாவின் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில்இ.ரெ. இளம்வழுதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட அவைத்தலைவர், கடலூர் சட்டமன்ற உறுப்பினர், பகுதி செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து அஞ்சலி செலுத்தினார்கள்.