மனிதனுக்கு இயற்கையிலேயே32 பற்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததேஅப்படியிருக்கஒரு 7 வயது சிறுவனின் வாயில் இருந்து 526 பற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சென்னையை சேர்ந்தபிரபுதாஸ் என்பவரின் மகனுக்கு 3 வயது முதல் வாயில்வீக்கம்இருந்துள்ளது. ஆனால் இதனை அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் சிறுவனின் 7 ஆம் வயதில் வாயில் வீக்கத்துடன் அதிக வலி இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிடிஸ் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் சிறுவனின் வாயில் வீங்கிய பகுதியில் 500 க்கும் மேற்பட்ட சிறு சிறு பற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பற்களை அகற்ற சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறிதும் பெரிதுமாக 526 பற்கள் அகற்றப்பட்டன. இனி அந்த சிறுவனுக்கு அதேபோல் மீண்டும் பற்கள் முளைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறினாலும் இத்தனை பற்கள் முளைத்தது எப்படி சத்தியம்.இதற்குமரபணு மாற்றம் அல்லதுஅபரிவிதமான வளர்ச்சி போன்றவையே காரணம் என மருத்துவத்துறை விளக்கியுள்ளது.
இருப்பினும் இதற்கு சுற்றுப்புற சூழலும் காரணமாக இருக்கலாம் எனக்கூறும் மருத்துவர் ரமணி, செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் இதற்கு முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.