Advertisment

காயல்பட்டினத்தைக் கலக்கிய '52 கோடி'

பாண்டிய மன்னர்களின் காலத்தில் தென் தமிழகத்தின் கொற்கை புன்னக்காயல் மற்றும் மணப்பாடு துறைமுகங்கள் வழியாக வெளி நாடுகளுக்குப் பண்ட மாற்று வணிகத்தின் மூலம் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டவர்கள் காயலை ஒட்டியுள்ள பகுதியினர். அதன் காரணமாக உருவானது தான் காயல்பட்டினம். பிறகு ஏற்பட்ட காலமாற்றம் காரணமாக அந் நகருக்குள் மும்பையைத் தலைநகராகக் கொண்ட சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை மெஜாரிட்டியான முஸ்லிம் மக்களைக் கொண்ட காயல்பட்டினத்தில் காலூன்றியது!.

Advertisment

நகர மக்கள் தங்கள் சேமிப்புகளை, வர்த்தகப் பரிமாற்றங்களை அந்த வங்கியில் டெபசிட் செய்யத் தொடங்கினார்கள்.

Advertisment

 '52 crores' mixed with Gayalbattinam

தொலை தொடர்பு சாதனங்கள் வளர்ந்து விட்ட நிலையில், காலமாறுபாட்டின் காரணமாகவும், மும்பையிலுள்ள தலைமை வங்கி கடந்த 11ம் தேதி K.Y.C. எனப்படும் உன்னுடைய வாடிக்கையாளரை அறிந்து கொள் என்று அதிலடங்கிய 11 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை வங்கியில் செலுத்த வேண்டும்.தவறினால் உங்கள் கணக்குகள் முடக்கப்படும் என்ற அறிவிப்பை காயல்பட்டினம் கிளையும் அறிவிக்க, அதன் வாடிக்கையாளர்கள் பதறி விட்டனர்.

 '52 crores' mixed with Gayalbattinam

காரணம், மற்ற வங்கிகளைப் போலின்றி இந்த வங்கியில் யாரும் கடன் பெறவில்லை. மாறாக நகர மக்களின் சுமார் 52 கோடி மதிப்பிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டது தான் அவர்களைக் கலக்கியெடுத்து விட்டது. அதே சமயம் கடையநல்லூரில் சுமார் 100 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.கூட்டம் கூட்டமாக வங்கிக்குத் திரண்ட காயல்பட்டினத்தின் மக்கள், வங்கியின் திட்டம் தேசிய குடியுரிமை சம்பந்தப்பட்டது என்பதால், பிரச்சினையாகலாம், என் நினைப்பில் தங்களின் பணத்தை, மினிமம் பேலன்ஸை மட்டும் வைத்து விட்டு மீதப் பணத்தை எடுக்கத் தொடங்கினர்.

கடந்த நான்கு தினங்களில் மட்டும் சுமார் 6 கோடி வரை வெளியேற, பதறிய வங்கியின் தென் மண்டல அதிகாரி ஸ்பாட்டுக்கு வந்து ஜமாத்தார்களிடம் விளக்கமளித்து, பயம் வேண்டாம் என்று சொன்னதையடுத்து பதட்டம் தணிந்தது.

இது குறித்து வங்கியின் மேலாளரான மாரியப்பனிடம் பேசியதில் ஆரம்ப காலங்களில் ரேசன் கார்டுகள் அடிப்படையில் வங்கிக் கணக்கை துவங்கினார்கள். தற்போது அது எடுக்கப்பட்டு கே.ஒய்.சி. எனப்படுகிற 11 ஆவணங்களில் குறிப்பாக ஆதார், பான்கார்டு போன்றவைகளில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்தால் போதும் என்று தான் அறிவித்தோம். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவுறுத்தல்கள் இதர வங்கிகளுக்கும் வந்துள்ளன. இதைக் கொண்டு பதட்டப்படத் தேவை இல்லை என்று அறிவித்து விட்டோம் என்றார்.

ஆறின பால் என்ற நம்பிக்கையில், சூடான பாலில் உதடுகளைப் பதித்த நிலை தான் அங்கே!

citizenship amendment bill people bank
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe