14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; 52 வயது நபர் கைது..! 

52 Age old person arrested under pocso act

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி பி.என்‌.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சாதிபதி (52). கட்டடத் தொழிலாளியான லட்சாதிபதி, அப்பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியுடன் லட்சாதிபதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக லட்சாதிபதி, அச்சிறுமியை கடைகளுக்கு கூட்டிச் செல்வதும், அவ்வப்போது அவருடன் விளையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த அந்த சிறுமியிடம் லட்சாதிபதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறவே, சிறுமியின் தாய் இதுகுறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள சாய்பாபா காலனி போலீசார், லட்சாதிபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Coimbatore POCSO ACT
இதையும் படியுங்கள்
Subscribe