புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி 515 கணேசன் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 50 ஆண்டுகளாக ஆதரவற்ற சடலம் முதல் அடிதடியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் வரை சுமார் 5154 சடலங்களை தூக்கி சுமந்த 515 கணேசன் பல ஆயிரம் கர்ப்பிணிகளை மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் சென்று இருக்கிறார். அத்தனையும் இலவசமாக.
இந்த சேவை போதாது என்று எங்கே இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டாலும் அந்த ஊர் மக்களுக்காக ஊரு ஊராக சென்று நிவாரணம் வசூல்செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்குவார். கடைசியாக கேரளாவில் வெள்ளப் பாதிப்பு வந்தபோது அந்த மக்களுக்காக வசூல் செய்து கொண்டுபோய் கொடுத்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த சேவகரை ஏனோ தமிழக அரசு மறந்துவிட்டது. ஆனால் எந்த பட்டம், பணத்துக்கும் ஆசைப்பதாக கணேசனுக்கு குடியிருக்க வீடு இல்லை. மகள்கள் சேர்ந்து ஒரு இடத்தை வாங்கிக் கொடுக்க அதில் பழைய தகரங்களைக் கொண்டு வீடாக மாற்றினார்.
கஜாவுக்கே அந்த தகரக் கொட்டகை இருப்பது பிடிக்கவில்லை போல.. 16 ந் தேதி அதிகாலை தகரங்களை புரட்டிக் கொண்டு போனது வீட்டுக்குள் இருந்த கணேசனும். அவர் மனைவியும் நனைந்து கொண்டே நின்றனர். வீட்டில் இருந்த அத்தனை பொருட்களும் நனைந்தது. மாற்றுத் துணி இல்லாமல் காற்றில் அடித்துச் சென்றது. வீடு இருந்ததற்கு அடையாளமாக சுவர்கள் மட்டும் இருக்க.. மனைவியை அங்கே விட்டுவிட்டு மாற்றுச் சட்டையின்றி கஜா வந்த நாளில் போட்டிருந்த சட்டை, கைலியுடன் புயல் பாதிக்காத கரூர் மாவட்டம் நோக்கி புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்காக புயல் நிவாரணம் வசூல் செய்ய கிளம்பிவிட்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த சேவகருக்கு இதன் பிறகும் உதவ ஏனோ தமிழக அரசுக்கு மனமில்லை.. நடிகர் லாரன்ஸ் வீடு கட்டிக் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார். தமிழக அரசு இனியாவது 515 கணேசனுக்கு உதவிகள் செய்யலாம் என்கின்றனர் ஆலங்குடி மக்கள்.