
2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அதையடுத்து கடலூரில் 27 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வந்துகொண்டிருந்தபோது, சின்ன கங்கனாகுப்பம் பகுதியில் கடலூர் தேர்தல் பறக்கும் படையினர், தாசில்தார் கலாவதி தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பெங்களூரைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 51 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்திய வட்டாட்சியர் பலராமன், “ராம்பிரசாத், கடலூரைஅடுத்த பெரியப்பட்டு பகுதியில் கட்டுமான பணி செய்துவரும் ஊழியர்களுக்கு சம்பளப் பணம் கொடுப்பதற்காக மங்களூரில் இருந்து எடுத்து வந்ததாக கூறினார்.” ஒரே நாளில் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)