51 District Judges transferred

Advertisment

தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 51 பேரை இடமாற்றம் செய்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவன மோசடி தொடர்பான சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி எஸ்.ஜவஹர், கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக இடமாற்றம். நீதிபதி ஜவஹருக்கு பதிலாக ஜி.விஜயலட்சுமி நியமனம். சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றத்தின் இரண்டாவது நீதிபதி கே.ரவி முதலாவது நீதிபதியாக நியமனம். இரண்டாவது நீதிபதியாக டி.சிவக்குமார் நியமனம்.