இன்று தமிழகத்தில் 509 பேருக்கு கரோனா!!! உயிரிழப்பு எண்ணிக்கையும் கூடியது!!!

509 people Affect corona in Tamil Nadu today

இன்று தமிழகத்தில் கரோனாவாபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 509 ஆக உள்ளது. இதனால் இதுவரை தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது.

இன்று சென்னையில் மேலும் 380 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது .சென்னையில் மட்டும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று தமிழகத்தில் 288 ஆண்கள், 221 பெண்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுதுதமிழகத்தில் 9,227 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 6,136ஆண்கள் 3,088 பெண்கள், மூன்று திருநங்கைகள் என 9,227 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். சென்னையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,262 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்றுஒரேநாளில் 42 பேர் குணமடைந்துள்ளனர்.இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர்எண்ணிக்கை 2,176 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் 6,984 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு, திருவள்ளூரில் ஒரே நாளில் தலா 25 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலையில் 23 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 64 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கரோனாவால் தமிழகத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தமாக கரோனாவால் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona virus Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe