மீன்பிடி தடை காலத்தில் உள்ள மீனவர்களுக்கு தலா 5,000 ரூபாய் உதவித் தொகையைஅறிவித்துள்ளது தமிழக அரசு.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகநாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால்பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தடை காலத்தில் உள்ள மீனவர்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணஉதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.