5000 page charge sheet in Armstrong case- Who are A 1,A 2?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் ரவுடிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் என பலர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கையானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டு அதில் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 28 பேர் இல்லாமல் மொத்தம் 30 பேர் மீது தற்பொழுது ஐயாயிரம் பக்கத்திற்கு மேல் உள்ள குற்றப்பத்திரிக்கையானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 5000 page charge sheet in Armstrong case- Who are A 1,A 2?

Advertisment

குற்ற பத்திரிக்கையின் சாராம்சமாக A1 யார் என்பது தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A 1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரனும், A 2 குற்றவாளியாக சம்போ செந்திலும் இடம் பெற்றுள்ளனர். எலும்பு நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிக்கானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மட்டுமல்லாது அண்மையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி காக்க தோப்பு பாலாஜி வழக்கிலும் சம்போ செந்தில் பெயர் அடிக்கப்பட்டது. இதுவரை சம்போ செந்தில் இந்த எந்த வழக்குகள் தொடர்பாகவும்போலீசில் பிடிபடவில்லை. தொடர்ந்து சம்போ செந்தில் தலைமறைவில்உள்ளது குறிப்பிடத்தக்கது.