Advertisment

விற்பனை பத்திரம் பெற 5000 லஞ்சம்... இளநிலை உதவியாளர் கைது!!

விற்பனைப் பத்திரம் அளிக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டகேகே.நகர் குடிசை மாற்று வாரிய இளநிலை உதவியாளரைலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

சேலையூரை சேர்ந்த சிவாஜி என்பவர் விற்பனை பத்திரம் பெறுவதற்காக கேகே.நகர் குடிசை மாற்று அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் லெனினை அணுகியுள்ளார். இதற்கு அவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

Advertisment

 5000 bribe to get the sale papers... govt officer arrested

இதுகுறித்து சிவாஜி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில், சிவாஜி கேகே.நகர் குடிசை மாற்று வாரியத்தில் வைத்து லெனினிடம் லஞ்சப்பணம் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 5000 bribe to get the sale papers... govt officer arrested

மேலும் அவரது அலுவலகத்தில் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இளநிலை உதவியாளர் லெனின் கைது செய்யப்பட்டார்.

govt employes arrest police Bribe Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe