Skip to main content

500 ரூபாய் லஞ்சம்; 25 ஆண்டுகளுக்கு பிறகு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

500 rupees bribe recipient sentenced to 25 years imprisonment court

 

திருச்சியை சேர்ந்த நல்லையன் என்பவர் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி கடந்த 2008 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அப்போது நல்லையன் தனது வங்கி கணக்கில் இருக்கும் ஈட்டிய மற்றும் ஈட்டா விடுப்பை பணமாக்கித் தர லால்குடி சார்நிலை கருவூலத்தில் கணக்கராகப் பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி ரூ. 500 லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து நல்லையன் லஞ்சஓழிப்பு போலீசாரிடம் புகார் கொடுக்க, அவர்கள் ரசாயனம் தடவிய பணத்தை நல்லையனிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியிடம் ரசாயனம் தடவிய பணத்தை நல்லையன் கொடுக்க, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

இந்த நிலையில் இன்று வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் சார்நிலை கணக்கராக இருந்த கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும், அபராதத்தைக் கட்டத்தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாகப் பயன்படுத்தி கையூட்டு கேட்டுப் பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும், அபராதத்தைக் கட்டத்தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்