Advertisment

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 500 பேர் மூன்றே நாட்களில் கைது

500 people involved in illegal activities arrested in three days!

சேலம் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள், கள்ளச்சாராயம், கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது விற்பனை, மண் மற்றும் மணல் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக்கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தீவிரச் சோதனை நடந்தது.

Advertisment

போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள், லாட்டரி, மண் மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை உடனுக்குடன் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

கடந்த மூன்று நாள்களாக நடந்த அதிரடிச் சோதனையில்500 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 1,500 லிட்டர் பாக்கெட் சாராயம், 3 ஆயிரம் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து மாவட்டக் காவல்துறை தரப்பிடம்கேட்டபோது, ''சேலம் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 500 பேரை கடந்த மூன்று நாட்களில் கைது செய்துள்ளோம். இவர்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகுசேலம் மத்தியச் சிறையில் அடைத்துள்ளோம்.

மற்றவர்கள் அனைவரையும்சேலம் ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜர்படுத்திஇனிமேல் குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. போதைக் கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கத்தில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.'' என்றனர்.

rowdies police Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe