500 out of 3500 vegetable vendors tested

கரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது காய்கறி மொத்த விற்பனை சந்தை பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்திலும், சில்லறை விற்பனை காய்கறி சந்தைகள் மாநகரில், சத்திரம் பேருந்து நிலையம், உழவர் சந்தை திடல், அண்ணா விளையாட்டு அரங்கம் அருகிலும், SIT அருகில் உள்ள இடங்களிலும் காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றன.

.காய்கறி சந்தையில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தது. மொத்த வியாபாரம் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். சில்லரை வியாபாரம் பின்பு தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டன.

Advertisment

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து திருச்சியிலும் வியாபார வணிகர்களின் நலன் கருதி கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டது. பெண் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா உள்ளிட்டோர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

500 out of 3500 vegetable vendors tested

Advertisment

காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஜி கார்னரில் 150 நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. ஜூன் 15 ஆம் தேதி தேவர் ஹாலில் சுமார் 120 நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு தற்போது வரை வெளிவரவில்லை என கூறப்படுகிறது.

அன்றைய தினமே அரியமங்கலம் பால்பண்ணை அருகே உள்ள புதிய வெங்காய மண்டியில் சுமார் 160 நபர்களைத் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில, மாவட்ட நிர்வாகிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே நிலையில் இரண்டு டிரைவர்களுக்கு கரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்றார்கள்.

இங்கிலீஷ் காய்கறி ஊழியர் இரண்டு நபர்களுக்கும் கண்டறியப்பட்டது. தக்காளி சில்லரை வியாபாரிக்கும் தொற்று ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்கள். அப்பொழுது வரகனேரி, எடமலைப்பட்டிபுதூர் பொதுமக்களும் சிகிச்சை பெற்றனர். தற்போது மதுரம் மைதானத்தில் சுமார் 100 வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

500 out of 3500 vegetable vendors tested

தற்போது வரை ஜி கார்னர், தேவர் ஹால், புதிய வெங்காய மண்டி, மதுரம் மைதானம் என சுமார் 500 வியாபாரிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மொத்த வியாபாரிகள் 1500 நபர்களும், சில்லரை வியாபாரிகள் கடையில் 2000 நபர்களும், தினக்கூலி சுமைதூக்கும், கை வண்டி இழுக்கும் உழைப்பாளர்கள் சுமார் ஐந்தாயிரம் நபர்கள் இருப்பார்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த, சில்லரை வியாபாரிகளும் ,கூலி தொழிலாளர்களும் உள்ள இடத்தில் தற்போது நூற்றுக்கணக்கானவர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணனிடம் பேசுகையில், மொத்தம், சில்லரை அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனையை மேற்கொண்டு வியாபாரிகள் நலன் மற்றும் பொதுமக்கள் நலன் காக்க வேண்டும் என்றார். வியாபாரிகள் தன்னார்வமாக பரிசோதனை எடுத்துள்ளார்கள்.கரோனா தொற்றானது அறிகுறியுடனும், சிலருக்கு அறிகுறி இல்லாமலும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

காய்கறி சந்தையை பொருத்தமட்டில் மொத்த வியாபாரிகள் சில்லரை வியாபாரிகள் வியாபாரிகள் மாநகராட்சி, பகுதி, வார்டு, தெரு என வணிக கடைகள் வரை காய்கறிகள் செல்கின்றன. ஆகையினால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஏனென்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றாமல் சந்தையில் பொதுமக்கள் நடப்பதால் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பொது மக்கள் கூறுகிறார்கள்.