Skip to main content

500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; க்யூ பிரிவு விசாரணை

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

nn

 

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வேதாளை கடற்கரை அருகே ஒரு தோப்பில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து க்யூ பிரிவு போலீசார் அந்த தோப்பு பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர். அதில் 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விசாரித்து வரும் போலீசார் சம்பந்தப்பட்ட தோப்பின் உரிமையாளரை விசாரித்து வருகின்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி மற்றும் ராமேசுவரம், மண்டபம் பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள், தங்கம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட வன உயிரினங்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.