50 years old ramasamy arrested under pocso act thirupattur district

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மகளான 5 வயது சிறுமி, டிசம்பர் 1ஆம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 52 வயது ராமசாமி, விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையிடம் பேச்சுக்கொடுத்து அங்கிருந்து அழைத்துச் சென்று வாயில் துணியை வைத்து அடைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Advertisment

50 years old ramasamy arrested under pocso act thirupattur district

அந்தப் பகுதிக்கு அக்கம்பக்கத்தினர் வருவதைக் கண்டு அந்த குழந்தையை விட்டுவிட்டு அவன் அங்கிருந்து சென்றுள்ளார். அழுதுக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்த மக்கள், நடந்ததை கேட்டு அதிர்ச்சியாகி உள்ளனர். அக்குழந்தையை உடனே வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குழந்தையின் தந்தை காவல்துறையில் தந்த புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி, தலைமறைவாக இருந்த ராமசாமியை கண்டுபிடித்து கைது செய்தார். பின்னர் போக்சோ உள்ளிட்ட மூன்று சட்ட பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment