Advertisment

அம்பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம்! பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குற்றச்சாட்டு!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில்காவல் நிலையத்தின் எதிரே இருந்த புரட்சியாளர் அம்பேத்கர் உருவச்சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து பலஇடங்களில் போராட்டம் நடைபெற்று வரும்நிலையில், தற்போது அரக்கோணம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு பகுஜன்சமாஜ் கட்சி, விடுதலைசிறுத்தை கட்சியினர்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Advertisment

50 years of Dravidian rule is responsible for the demolition of Ambedkar statue! Bahujan Samaj Party chiefArmstrong accuses

அப்போது பேசிய பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், முதலில் இதை வன்மையாககண்டிக்கிறோம். அம்பேத்கர் சிலை உடைப்பு செய்த இடத்திலே வேறு சிலையை நிறுவியுள்ளனர். ஆனால் அதேபோல இந்த சம்பவத்தின் பின் புலத்தில் உள்ளார்கள் யார் என்பதை கண்டறிந்துஅவர்களின் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுபோன்ற தொடர் சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அறியாமையே, டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை யாருக்காகதூக்கி எறிந்துவிட்டுவெளியேறினார் என்று தெரிந்தால்அவர்கள் இப்படி செய்யமாட்டார்கள். உடைக்கப்பட்ட அம்பேத்கரின்சிலைக்கு பதிலாக வேறு சிலை வைத்துவிட்டார்கள். இந்த 50 ஆண்டு திராவிட கால ஆட்சியே இதற்கு காரணமாக உள்ளது என்றார்.

statue ampetkar vedharanyam ARAKONAM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe