கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கர்நாடகாவை ஒட்டியுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 57 ஆயிரம் கனஅடி என நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தடையானது இன்று நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பன்னிரண்டாயிரம் கனஅடி என இருந்த நீர்வரத்து தற்பொழுது 57,000 உடனடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணையில் இருந்து சுமார் 75 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/06/27/a4218-2025-06-27-07-24-18.jpg)