
நெல்லைமாவட்டத்தில் பெய்துவரும்தொடர்கனமழை காரணமாகதாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும்கனமழை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு,கடனா,ராமாநதிஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மணிமுத்தாறு ஆணையிலிருந்து 25 ஆயிரம் கனஅடி நீரும், பாபநாசம் அணையிலிருந்து 23 ஆயிரம் கனஅடி நீரும், சேர்வலாறு அணையிலிருந்து 4,700 கனஅடி நீரும்வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ளஅபாயஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தற்பொழுது தாமிரபரணி ஆற்றில்50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)