
சேலத்தில் தான செட்டில்மெண்ட் செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியை சேர்ந்த பழனிவேல் என்ற நபர் தாதகாப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனது தாயாரின் நிலத்தை தான செட்டில்மெண்ட் செய்ய சென்றுள்ளார். இதற்காக சார்பதிவாளர் செல்வபாண்டியை அணுகியுள்ளார். அப்போது அங்கிருந்த கண்ணன் என்ற இடைத்தரகர் ஐம்பதாயிரம் கொடுத்தால் செட்டில்மெண்ட் செய்து தருவதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையில் பழனிவேல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை போலீசார் கொடுத்து அனுப்பினர். லஞ்சப் பணத்தை கண்ணனும், சார்பதிவாளர் செல்வபாண்டியும் பெறும் பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.