/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SDGTETE134.jpg)
தமிழகத்தில் கரோனாநாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில்மக்கள் ஷாப்பிங் செல்ல ஏதுவாக 50 மாநகர சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தியாகராயநகர், புரசைவாக்கம்,வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வர ஏதுவாக இந்த சிறப்பு பேருந்துகள் 7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில்இயக்கப்பட உள்ளது.வழக்கமாக இயக்கப்படுகின்ற பேருந்துகளுடன்சேர்த்து 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. மேலும் தேவை ஏற்படின் இதற்கு மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)