50 school students fainted after eating lunch

Advertisment

ஜெயங்கொண்டம் அருகேபள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் அரசு ஆதிதிராவிடர் நலத்தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் வழக்கம் போல் இன்று மதிய உணவு சாப்பிட்டனர். இதில் மதிய உணவு சாப்பிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மாணவர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.