ADVERTISEMENT

மருத்துவ படிப்புகளில் ஓபிசி-க்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்குகள் உச்ச நீதிமன்ற முடிவுகளுக்காக ஒத்திவைப்பு!

10:22 PM Jul 09, 2020 | kalaimohan

ADVERTISEMENT

மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி, திமுக, அதிமுக, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மருத்துவ படிப்புகளில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால் அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகள், இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஜூலை 13-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அங்கு நிலுவையில் உள்ள வழக்குகளால் இங்குள்ள வழக்குகளின் விசாரணைக்கு தடையில்லை என்றும், பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதாகவும், திமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது, அதிமுக மற்றும் தமிழக அரசு தரப்பில், வழக்குகள் தொடரப்பட்டதன் அவசரம் கருதி, விரைந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்ற முடிவுகளைத் தெரிந்த பின் விசாரிக்கலாம் எனக்கூறி வழக்கு விசாரணையை ஜூலை 17-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT