50 pound jewelery stolen from priest's house; Police investigation

புரோகிதர் வீட்டில் 50 பவுன் நகை மர்ம நபர்களால் திருடப்பட்ட கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கத்தில் வசித்து வருபவர் ரங்கராஜ். புரோகிதம் செய்யும் தொழில் வந்த செய்து வந்த ரங்கராஜ் கடந்த வெள்ளிக்கிழமை அவருடைய தந்தையின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவருடைய குடும்பத்துடன் மயிலாப்பூர் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது திடீரென ரங்கராஜன் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிப்பவர்கள் அவருக்கு போன் செய்து உங்களுடைய வீட்டின் கதவு திறந்து கிடக்கிறது என பகீர் தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். வந்து பார்க்கையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 50 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு ரங்கராஜ் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரங்கராஜன் வீட்டிற்கு வெளியே சிசிடிவி கேமராக்கள் அந்த பகுதியில் பொருத்தப்படாததால், குற்றவாளியை பிடிப்பதில்சிரமம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.