/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2856.jpg)
சேலம் மாவட்டம், கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள், வளர்ப்பு கழுதைகளுடன் சுற்றி வருகின்றனர். அவர்கள் கழுதை பாலை கறந்து தெருத்தெருவாக விற்பனை செய்தனர். 50 மி.லி., பால் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
இது தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, ''கழுதைப்பாலில் நிறைய நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த பாலை குடிக்கலாம். ஒரு கழுதையிடம் ஒரு நாளைக்கு 250 மி.லி. பால் கறக்கலாம்,'' என்றனர்.
ஆணையாம்பட்டி, கெங்கவல்லி, கூடமலை, கடம்பூர், கிருஷ்ணாபுரம், நடுவலூர், தெடாவூர் ஆகிய கிராமங்களில் கழுதைப்பாலை கூவிக்கூவி விற்பனை செய்தனர். பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
Follow Us