
அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான 50 சதவீத இடஒதுக்கீடுபற்றி இந்திய மருத்துவ கவுன்சில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.அதில்,
ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இடஒதுக்கீடுக்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதிவேண்டும். உச்சநீதிமன்றஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கையில் மாற்றம் செய்ய முடியாது. மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்ச நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும்எனக் கூறியுள்ளது.
தமிழகஅரசு, அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துபூர்வமாக இந்தத் தகவலை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)