Skip to main content

பொள்ளாச்சி காவல்நிலையத்திற்கு 50 சிசிடிவி கேமராக்கள் வழங்கியுள்ளோம்: ஜி.வி. பிரகாஷ்

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

 

பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்று திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார் கூறியுள்ளார்.

 

G. V. Prakash Kumar


ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ச்மேன்' படம் இலவசமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

 

அப்போது அவர், தங்கள் படக்குழு சார்பில் பொள்ளாச்சியில் பொது இடங்களில் பொருத்த 50 சிசிடிவி கேமராக்கள் வழங்கியுள்ளோம். குழந்தைகளை பெற்றோர்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும். இது அவசியமான ஒன்று. குழந்தைகள் பற்றி பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.



 


குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் என்ன நடக்கிறது. யாரிடம் எப்படி பேச வேண்டும். யார் யார் உங்களிடம் பழகுகிறார்கள். கண்காணிப்பு மிக மிக அவசியம். பெற்றோருக்கும் சில வகுப்புகள் எடுக்க வேண்டும். பாலியல் கல்வி அவசியம். இதனை அரசு செய்ய வேண்டும். good touch bad touch பற்றி குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். இவ்வாறு கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பதைப்போல் இது மோடியின் புளுகு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Chief Minister M.K.Stal's criticized prime minister modi

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13-03-24) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். அதன் பிறகு, பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற அவர், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 57,325 பேருக்கு ரூ.1,273 கோடி செலவில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதே போல், ரூ.490 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 

அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவை மாவட்டத்துக்கு 13 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடுகிறேன். அதில், தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பை நீக்க ரூ.14 கோடி நிதி வழங்கப்படும். தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் சாலை அமைத்து தரப்படும். பெரியநாயக்கன்பாளையம் உட்பட 4 ஊராட்சி ஒன்றியத்தில் பாலங்கள் கட்டித் தரப்படும். 

ரூ.2.8 கோடி செலவில் 3 லட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதே போல், ஈரோடு மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். ஈரோட்டில் ரூ.15 கோடி செலவில் வ.உ.சி பூங்கா தரம் உயர்த்தப்படும். 8 சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்படும். 

வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?. அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த அமைச்சர்கள், மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன?. மேற்கு மண்டலம் எங்கள் கோட்டை என்று கூறும் அதிமுக மக்களுக்கு என்ன செய்தது?. பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்க முடியுமா?. கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அமைச்சரும், டி.ஜி.பியும் இருந்தது யார் ஆட்சியில்?. தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான். 

அதிமுக, பா.ஜ.க கள்ளக்கூட்டணிக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது. நாட்டுமக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், மோடியின் உத்தரவாதம் என பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார். தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்று பட்டியல் போட்டு பிரதமரிடம் மக்கள் கேட்க வேண்டும். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போதல்லாம், மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை திமுக எதிர்க்கிறது என்று கூறுகிறார். எந்த திட்டத்துக்கு நான் தடையாக இருந்தேன் என்று பிரதமர் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு தடுப்பதாக பிரதமர் மோடி கூறியது அப்பட்டமான பொய். அண்ட புளுகு ஆகாச புளுகு என்பதைபோல் இது மோடியின் புளுகு. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட நாங்கள் தடுத்தோமா? அல்லது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தடுத்தார்களா? பா.ஜ.க.வின் பொய்யும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது” என்று கூறினார். 

Next Story

மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Chennai Collector action order for pharmacies

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது  உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.