50 casualties?; 132 people were injured; rescue efforts are intensive

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி 50 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்வெளியாகி உள்ளது. சென்னை 044-25330952, 044-25330953, 25354771 அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் 132 பேர் இதுவரை காயம் அடைந்துள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.

Advertisment