
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல், பாரதிபுரம் சௌராஷ்டிரா காலனியைச் சேர்ந்த நாகராஜ் (19), லோகநாதன் (18) உள்ளிட்ட 8 மாணவர்கள், நண்பர்களுடன் செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்திற்கு குளிக்கச் சென்றனர்.
அப்போது அங்கு குளித்துக்கொண்டிருந்த நாகராஜ் (19), லோகநாதன் (18), கார்த்திக் பிரபாகரன் (19), பரத் (16), செல்வ பரணி (19) ஆகியோர் எதிர்பாராத வகையில் தண்ணீரில் மூழ்கினர். இதனைப் பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்க முயன்றனர். இதனையடுத்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரில் மூழ்கிய 5 மாணவர்களின்உடல்களை மீட்டனர். இச்சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)