5 years imprisonment for the boy pocso case

Advertisment

சேலத்தில், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் கிச்சிப்பாளையம் எம்எம்சி காலனியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த14 வயது சிறுமியை கடந்த 2020ம் ஆண்டு ஜன. 30ம் தேதி, ஆசை வார்த்தை கூறி, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் ரவிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், திங்கள்கிழமை (பிப். 27, 2023) இந்த வழக்கில் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரவிக்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.